கே. வி. தங்கபாலு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தங்கபாலு | |
---|---|
தொகுதி | சேலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 15, 1950 சேலம் மாவட்டம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | ஜெயந்தி |
பிள்ளைகள் | 1 மகன்,1மகள் |
வாழிடம் | சென்னை |
இணையத்தளம் | [1] |
மூலம்: [2] |
கே. வி. தங்கபாலு (ஆங்கிலம்: K. V. Thangkabalu) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் மார்ச் 15,1950ஆம் நாள் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஜெயந்தி. இவருக்கு 1 மகன்,1 மகள் உள்ளனர்.
இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார்.