கே. சங்கர் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சங்கர் பிள்ளை
பிறப்பு(1902-07-31)31 சூலை 1902
காயம்குளம், கேரளா
இறப்பு26 திசம்பர் 1989(1989-12-26) (அகவை 87)
பணிகேலிச்சித்திர வரைவாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1932–1986
அறியப்படுவதுசங்கர்ஸ் வீக்லி
குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children's Book Trust)
சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்
விருதுகள்பத்ம விபூசண் (1976)

கே. சங்கர் பிள்ளை (ஆங்கில மொழி: K. Shankar Pillai, மலையாளம்: കെ. ശങ്കര് പിള്ള) (31 சூலை 1902–26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.[1][2]

பிறப்பும் படிப்பும்[தொகு]

கேரளத்தைச் சேர்ந்த காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

பணி[தொகு]

  • கேலிச் சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட சங்கர் பிரீ பிரஸ் ஜர்னல், பாம்பே குரோனிக்கில் போன்ற பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.
  • சங்கர்ஸ் வீக்லி இதழை 1948 இல் தோற்றுவித்து நடத்தினார். அபு ஆபிரகாம், ரங்கா, குட்டி போன்ற கார்டூனாளர்களை தம் பத்திரிகையில் எழுத வைத்து ஊக்குவித்தார்.
  • பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி காலத்தில், 1975 ஆம் ஆண்டில் சங்கர்ஸ் வீக்லி வெளியிடுவதை நிறுத்தினார்.
  • குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஓவியங்கள், கதைகள் ஆகியவற்றைப் படைத்தார்.
  • சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் இவரால் 1965இல் தொடங்கப்பட்டது.

விருதுகள்[தொகு]

  • பத்மசிறீ (1956)
  • பத்மபூசண் (1966)[3]
  • பத்ம விபூசண் (1976)[4]

தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது

மேற்கோள்[தொகு]

  1. Khorana, Meena (1991). The Indian subcontinent in literature for children and young adults. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-25489-3.
  2. http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm
  3. Padma Bhushan Awardees
  4. Padma Vibhushan Awardees
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கர்_பிள்ளை&oldid=2968397" இலிருந்து மீள்விக்கப்பட்டது