குலான் கதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலான் கதுன் (அநேகமாக 1164 –அநேகமாக 1220கள்) அல்லது அபிகா குலான் கதுன் என்பவர் செங்கிஸ் கானின் மனைவியரில் ஒருவர் ஆவார். மங்கோலியப் பேரரசில் இவர் போர்த்துக்கு அடுத்த இடத்தில் இருந்தார். 

சுயசரிதை[தொகு]

இவரது தந்தையார் பெயர் தைர்-உசுன். தைர்-உசுன் உவாஸ் மெர்கிடு இனத்தின் தலைவர் ஆவார். குலானின் தந்தை சரணடைந்த பின்னர் இவர் செங்கிஸ் கானுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டார். இவர்களுக்குக் கெலெசியன் என்றொரு மகன் பிறந்தார். மங்கோலியப் பேரரசில் கெலெசியன் போர்தேயின் நான்கு மகன்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். 

செங்கிஸ் கானின் மனைவியாக[தொகு]

குலானுக்குத் தனியாக ஓர்டோ அல்லது சபை இருந்தது. இவருக்கு கென்டீ மலைகள் ஆட்சி செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது.[1] 

செங்கிஸ் கான் குலானின் மேல் அதிக விருப்பம் கொண்டிருந்தார். பல நேரங்களில் இவர் மட்டுமே செங்கிஸ் கானுடன் போர்களுக்குச் சென்றுள்ளார். உதாரணமாக குவாரசமியா மீதான மேற்கத்தியப் படையெடுப்புகளுக்கு இவர் செங்கிஸ் கானுடன் சென்றுள்ளார். இவர் இந்தியாவிற்கு அருகில் இறந்தார். கடினமான பனிக்குக் கீழ் புதைக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. Weatherford 2010, ப. 28

ஆதாரங்கள்[தொகு]

  • Weatherford, Jack. (2010). The Secret History of the Mongol Queens. Broadway Paperbacks, New York.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலான்_கதுன்&oldid=3580616" இலிருந்து மீள்விக்கப்பட்டது