கிம் ஆம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிம் ஆம் (கொரிய மொழி: 김암) எட்டாம் நூற்றாண்டுகொரிய வானியலாளர்; கணியவியலாளர்; படைமேலர். இவர் சில்லா அரசு காலத்தில் யின்-யாங் மற்போர் வல்லுனராகவும் மாயவித்தை செய்பவராகவும் விளங்கினார்.

வாழ்க்கை[தொகு]

இவர் படைத்தளபதி கிம் யூழ்சினின் பேரன் ஆவார்.[1][2]

கிம் ஆம் யின்-யாங் மற்போரைச் சீன நாட்டு சாங்கன் மாகாணத்தில் பயின்றார். இம்மற்போர் ஒரு தொன்ம மற்போர் வகையாகும்.[2][3] இவர் பொருட்கள் உருமாறும் கோட்பாடு (Tungap ipsong pop) எனும் தாவோயியப் படைப்பை எழுதினார். இது சண்டைக்கலையின் தொன்ம உருவு (Tungkapbop) என்றும் தண்டுகளைத் தவிர்க்கும் கோட்பாடு (Tun'gap ipsong pop) என்றும் அறியப்படுகின்றது.[2][3][4] இவரது புங்-சு-சோல்.(Pung-su-sol) எனும் புவியியல் கோட்பாடுதான் கொரிய அறிவியலில் முதலில் பதிவாகிய புவியியல் மேற்கோளாகும்.[5] கி.பி 769 இன் ஓர் பழங்கதைப்படி இவர் ஓர் மந்திர ஓதலால் புயலை உருவாக்கி பஞ்சத்தை உருவாக்கவிருந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தைக் கொன்றுள்ளார். இதில் இருந்து இவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினரைப் போலவே இவரும் மாயவித்தை செய்பவராக இருந்துள்ளார் எனத் தெரியவருகிறது.[1]

சில்லா அரசு இவருக்கு அலுவற்பணிகளைத் தந்துள்ளது. இப்பணியின் பெயர் "அண்ட நிகழ்வு வல்லுனர்",[3] அல்லது "அறிவியல், வானியல் பேரறிஞர்" (Sachon Paksa)[2] or "வானியல் மாபெரும் பேராசிரியர்" எனப் பலவாறாக மொழிபெயர்க்கப்படுகிறது; அவரது காலத்தில் இருந்த வானியல் பேராசிரியர் எவருக்கும் தரப்படாத ’மாபெரும்’ எனும் அடைமொழி இவருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.[1]

இவர் 797 இல் யப்பானின் நாரா மன்றத்துக்கு தூதுவரக அனுப்பப்பட்டுள்ளார், அங்கு இவர் யப்பான் பேரரசரான கோனினின் பெருமதிப்பைப் பெற்றுள்ளார்.[2] (ஆ-டோ கியூயிi)என்ற யப்பான் பயண நூலை எழுதிய கிம் ஆம் இவராகத்தான் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது.[6][7]

இவர் போர்ப்படை தளபதி மட்டுமன்றி, போர்க்கோட்பாட்டாளரும் ஆவார். இவர் பயேகாங் படையணிக்கு . "ஆறுவரிசை அணிவகுப்புமுறை. "யில் பயிற்சியளித்து வழிநடத்தினார்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Hanʼguk Yŏnʼguwŏn (Seoul, Korea) (1977). Journal of Social Sciences and Humanities. Korean Research Center. p. 75.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 The Journal of Modern Korean Studies. Mary Washington College. 1987. p. 124.
  3. 3.0 3.1 3.2 3.3 Ki-baek Yi (1984). A New History of Korea. Harvard University Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-61576-2.
  4. John Stewart Bowman (2013). Columbia Chronologies of Asian History and Culture. Columbia University Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50004-3.
  5. Korea: Its Land, People, and Culture of All Ages. Hakwon-Sa. 1963. p. 467.
  6. Homer Bezaleel Hulbert (1909). The Passing of Korea. Doubleday, Page & Company. p. 310.
  7. Korea Review. Methodist Publishing House. 1902. p. 290.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஆம்&oldid=3175942" இலிருந்து மீள்விக்கப்பட்டது