கின்னியர்-பெர்ரன் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கின்னியர்-பெர்ரன் வினை (Kinnear–Perren reaction) என்பது ஆல்க்கைல் பாசுபோனைல் இருகுளோரைடுகள் (RP(O)Cl2) மற்றும் ஆல்க்கைல் பாசுபோனைல் எசுத்தர்கள் (RP(O)(OR')2).[1] தயாரிக்கப் பயன்படும் ஒரு வேதி வினையாகும். கிளே-கின்னியர்-பெர்ரன் வினை என்ற பெயராலும் இந்த கரிமபாசுபரசு வேதியியல் வினை அறியப்படுகிறது. ஆல்க்கைல் குளோரைடு, பாசுபரசு முக்குளோரைடு மற்றும் அலுமினியம் முக்குளோரைடு ஆகியவை இவ்வினைக்கான வினைபடு பொருள்களாகும்.[2] ஆல்க்கைல்முக்குளோரோபாசுபோனியம் உப்பு வழியாக இவ்வினை தொடர்கிறது:

RCl + PCl3 + AlCl3 → [RPCl3]+AlCl4

இந்த முக்குளோரோபாசுபோனியம் இடைநிலையை அலுமினியத் தூளுடன் சேர்த்து குறைப்பு வினைக்கு உட்படுத்தினால் ஆல்க்கைல்முக்குளோரோபாசுபீன்கள் (RPCl2) கிடைக்கும்.

இதே இடைநிலை வேதிப்பொருளை பகுதி நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் ஆல்க்கைல்பாசுபோனைல் இருகுளோரைடை அளிக்கிறது:

[RPCl3]+AlCl4 + H2O → RP(O)Cl2 + AlCl3 + 2 HCl


கின்னியர்-பெர்ரன் வினை முதலில் வேதியியலாளர் கிளே என்பவரால் தெரிவிக்கப்பட்டது. கின்னியர் மற்றும் பெர்ரன் ஆகியோரால் விரிவாக்கப்பட்டது. நான்கு குளோரினேற்றம் அடைந்த மீத்தேன்கள் (CH4−xClx) தொடர்புடைய CH3-, CH2Cl-, CHCl2-மற்றும் CCl3-பதிலீடு செய்யப்பட்ட வழிப்பெறுதிகளை கொடுக்கின்றன என்பதை இவர்கள் விவரித்தனர். ஐதரசன் சல்பைடை வினைக்குள் கொண்டு வந்தால் ஆல்க்கைல்தயோபாசுபோனைல் இருகுளோரைடுகள் கிடைக்கும் என்பதையும் இவர்கள் விவரித்தனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Svara, J. (2008). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a19_545.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2. .
  2. Rachel Waschbüsch; John Carran; Angela Marinetti; Philippe Savignac (1997). "The Synthesis of Dialkyl α-Halogenated Methylphosphonates". Synthesis 1997 (7): 727–743. doi:10.1055/s-1997-1417. https://hal.archives-ouvertes.fr/hal-03166421/file/Waschbusch_Synthesis_1997_727.pdf. 
  3. A. M. Kinnear; E. A. Perren (1952). "Formation of Organo-Phosphorus Compounds by the Reaction of Alkyl Chlorides with Phosphorus Trichloride in the Presence of Aluminium Chloride". J. Chem. Soc.: 3437–3445. doi:10.1039/JR9520003437. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னியர்-பெர்ரன்_வினை&oldid=3859919" இலிருந்து மீள்விக்கப்பட்டது