காசி விசாலாட்சி கோயில்
காசி விசாலாட்சி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | வாரணாசியில் உள்ள சக்தி பீடம் |
பெயர்: | விசாலாட்சி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | வாரணாசி |
அமைவு: | மிர் படித்துறை, வாரணாசி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விசாலாட்சி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோயில் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1893 |
அமைத்தவர்: | நாட்டுக்கோட்டை நகரத்தார் |
காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple or Vishalakshi Gauri Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாகக் கருதப்படுகிறது.
முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இரு தேவியர்களும் வேறுபட்டுக் காட்சியளிக்கின்றனர்.[3]
பெயர்க் காரணம்[தொகு]
விசாலாட்சி எனில் அகண்ட கண்களைக் கொண்டவள் என்று பொருள். காசி விசாலாட்சியின் பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.
நகரத்தார் திருப்பணி[தொகு]
நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் பொ.ஊ. 1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது.[4] இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள் (பொ.ஊ. 1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[4] இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது.[4]
திருவிழாக்கள்[தொகு]
- நவராத்திரி
- விஜயதசமி
- கஜலி தீஜ் (Kajali Tij/Black Third)
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Eck 1982, ப. 229.
- ↑ Varanasi Temples
- ↑ P. Arundhati (1 January 2001). Annapurna: A Bunch of Flowers of Indian Culture. Concept Publishing Company. pp. 17–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-897-4. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
- ↑ 4.0 4.1 4.2 சோமலெ (1963). ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர வரலாறு. p. 40.
மேற்கோள்கள்[தொகு]
- Jones, Constance; Ryan, James D. (2007). Encyclopedia of Hinduism. Infobase Publishing. pp. 401–402. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816075645. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
- Sircar, Dines Chandra (1998). The Śākta Pīṭhas. Motilal Banarsidass Publ. pp. 4–6, 12.13 & 24–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120808799. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
- Eck, Diana L. (1982). Banaras: City of Light. Motilal Banarsidass Publ. pp. 239, 242, 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120808799. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
- Vanamali, Diana L. (2008). Shakti: Realm of the Divine Mother. Inner Traditions / Bear & Co,. pp. Review page. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781594771996. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - Bartaman, a Bengali magazine Sharad Sankhya 1410 (Bengali year) - details mentioned in the article Kashir Vishwanath Vishwanather Kashi by Suman Gupta at page 60.