கர்பி ஆங்லாங் பீடபூமி

ஆள்கூறுகள்: 26°11′10″N 93°34′53″E / 26.1861°N 93.581269°E / 26.1861; 93.581269
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பி ஆங்லாங் பீடபூமி
பரிமாணங்கள்
பரப்பளவு7,000 கிமீ2 (2,700 சதுரமைல்)[1]
பெயரிடுதல்
சொற்பிறப்புகர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
புவியியல்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்

கர்பி ஆங்லாங் பீடபூமி (Karbi Anglong plateau) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள இந்திய தீபகற்ப பீடபூமியின் விரிவாக்கமாகும். ஆண்டுதோறும் சூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு கோடைப் பருவமழையிலிருந்து இந்தப் பகுதி அதிகபட்ச மழையைப் பெறுகிறது.

புவியியல்[தொகு]

பீடபூமியின் சராசரி உயரம் 300 மீட்டர் (984 அடி) முதல் 400 மீட்டர் (1,312 அடி) வரை மாறுபடும்.[2] கர்பி ஆங்லாங் பீடபூமி பேரிக்காய் வடிவமானது. இது சுமார் 7000 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] இது மேகாலயா பீடபூமியுடன் தெற்கே குறைந்த சீரற்ற நிலப்பரப்பு வழியாக இணைகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://www.northeastindiainfo.com/2020/05/karbianglong-plateau.html Karbi ANglong Plateau
  2. Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7450-538-5.
  3. Saikia, Partha. "Karbi Plateau Region of India". North East India Info.{{cite web}}: CS1 maint: url-status (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்பி_ஆங்லாங்_பீடபூமி&oldid=3931172" இலிருந்து மீள்விக்கப்பட்டது