கரம்சோதி தலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரம்சோதி தலால் (Karamjyoti Dalal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இணை விளையாட்டு தடகள வீரர். வட்டு எறிதல் வீராங்கனையாக அறியப்படுகிறார். அரியானா மாநிலத்தின் ரோத்தக்கு நகரத்தைச் சேர்ந்தவர். ஐபிசி உலக இணை தடகள வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். [1]ரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் ரோத்தக்கு நகரிலுள்ள மகரிசி தயானந்த் பல்கலைக்கழகத்தில் படித்தார்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதற்கு முன்பு கரம்சோதி ஒரு கபடி வீராங்கனையாக இருந்தார். இவ்விபத்தில் கரம்சோதிக்கு இயக்குப் புலனுணர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இவர் வட்டு எறிதல் போட்டியாளராகவும் ஒரு பயிற்சியாளராகவும் செயல்படுகிறார். அரியானாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறையிலும் பயிற்சியாளராக உள்ளார். இணை தடகள விளையாட்டை தன் அத்தையின் உதவியோடு கற்றுக் கொண்டார்.[2]

பதக்கங்கள்[தொகு]

  1. 2017, துபாயில் நடந்த பாசாகிராண்டு பிரிக்சு போட்டியில் தங்கப் பதக்கம்.
  2. 2014 ஆம் ஆண்டு பெய்சிங் நகரத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள். [2]
  3. . 2014 ஆசிய விளையாட்டின் போது . உலகின் தரவரிசையில் எட்டாம் நிலை
  4. 2014 இலண்டனில் நடந்த உலக இணை தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karamjyoti Dalal secures World Championships bronze in a show of mental strength". Zeven. 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
  2. 2.0 2.1 "Will Karamjyoti Dalal become the first Indian woman to win Paralympic gold?". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
  3. "Karamjyoti Dalal recovers from poor show in Rio to win bronze in World Para Athletics Championships". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரம்சோதி_தலால்&oldid=3894855" இலிருந்து மீள்விக்கப்பட்டது