உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்றுபட்ட நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மாண்டு அரண்மனையை காக்கும் கூர்க்கா படைவீரர்கள்

ஒருகிணைந்த நேபாளம் (unification of Nepal) கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தில் சிதிறியிருந்த நேபாளத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து 1769-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினார். காட்மாண்டுப் போர், கீர்த்திப்பூர் போர் மற்றும் பக்தபூர் போர்கள் மூலம், கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, காத்மாண்டு சமவெளிப் பகுதிகளில் இருந்த காட்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் போன்ற 3 நகர இராச்சியங்களை வென்று கோர்க்கா இராச்சியத்துடன் இணைத்தார். பின்னர் மலைப்பகுதியில் இருந்த தலைநகரான கோர்க்காவை, மன்னர் பிரிதிவி நாராயாணன் ஷா, 1769-ஆம் ஆண்டில் காட்மாண்டு நகரத்திற்கு மாற்றினார்.[1][2]

மேற்கு நேபாளத்தின் 24 இராச்சியங்களை வென்ற மன்னர் பிரிதிவி நாராயணனின் ஷா வமத்தினர் கிழக்கே சத்லஜ் ஆறு முதல் மேற்கே சிக்கிம்-ஜல்பைகுரி வரை இமயமலைப் பகுதிகளில் நேபாள இராச்சியத்தை போர்கள் மூலம் விரிவுப்படுத்தினர்.[1][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Pradhan, Kumar, 1937- (1991). The Gorkha conquests : the process and consequences of the unification of Nepal, with particular reference to eastern Nepal. Calcutta: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-562723-7. இணையக் கணினி நூலக மைய எண் 24874742.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. Unification of Nepal – by King Prithivi Narayan Shah
  3. Whelpton, John. (2005). A history of Nepal. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-80026-9. இணையக் கணினி நூலக மைய எண் 55502658.

மேலும் படிக்க[தொகு]

  • Fr. Giuseppe. (1799). An account of the kingdom of Nepal. Asiatic Researches. Vol 2. (1799). pp. 307–322.
  • Reed, David. (2002). The Rough Guide to Nepal. DK Publishing, Inc.
  • Wright, Daniel, History of Nepal. New Delhi-Madras, Asian Educational Services, 1990
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றுபட்ட_நேபாளம்&oldid=3099616" இலிருந்து மீள்விக்கப்பட்டது