ஒண்டிகநத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒண்டிகநத்தம்
Undiganatham
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
அரசு
 • வகைதமிழ்நாடு அரசு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 121

ஒண்டிகநத்தம் (Undiganatham) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது வேப்பணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

ஊர் பெயர் குறித்த கதை[தொகு]

அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வீடு வாசலின்றி வசித்துவந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பகுதியை நிர்வகித்துவந்த பேரிகை சமீந்தாரிடம் தங்களுக்கு வீடுகள் கட்டித்தரக் கோரினார்களாம். ஏழை மக்களின் கோரிக்கையை ஏற்ற சமீன்தார் நிலத்தை மட்டும் கொடுத்தார். ஆனால் வீடு கட்டித்தரவில்லை. மக்களிடமும் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள பணம் இல்லாததால், அனைவரும் சேர்ந்து ஒரு பொது உண்டியல் ஒன்றை வைத்தனர். தாங்கள் வருவாயின் ஒரு பகுதியை அந்த உண்டியலில் சேர்த்துவந்தனர். பெரும் தொகை சேர்ந்த பிறகு அதில் இருந்த பணத்தை அவர்கள் சமமாக பகிர்ந்துகொண்டு அனைவரும் வீடு கட்டிக்கொண்டனர். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து இந்த ஊருக்கு ஒண்டிகநத்தம் என்ற பெயர் வந்ததாக ஒரு செவிவழிக்கதை நிலவுகிறது.

ஒண்டிக என்ற தெலுங்கு சொல்லுக்கு உண்டியல் என்பது பொருளாகும். நத்தம் என்றால் தெலுங்கில் காலியாக உள்ள நிலம் என்பது பொருள். இந்த இரு சொற்களும் இணைந்து ஒண்டிகநத்தம் என்ற ஊர் பெயர் உருவானதாக கூறப்படுகிறது.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 297 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 198 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 941 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 461 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 480 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 44.42% (ஆண்கள் 51.46%, பெண்கள் 37.09%) ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 147. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Undiganatham Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டிகநத்தம்&oldid=3799491" இலிருந்து மீள்விக்கப்பட்டது