உறைபனிச்சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்வீடன், அபிஸ்கோ -   உறைபனிச்சிதைவினால்  உடைந்துள்ள பாறை.

உறைபனிச் சிதைவு என்பது மலைப்பகுதிகள் மற்றும் குளிர் பிரதேசங்களில் ஏற்படுகிறது. சில நேரங்களில் விரிசல்கள் உள்ள பாறைகளில் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. அந்த நீர் இரவு நேரங்களில் நிலவும் குளிர்ந்த வெப்பத்தின் காரணமாக உறைந்து, பனிக்கட்டியாக மாறும் மேலும் பகல் நேரங்களில் உருகும். பனிக்கட்டியானது ஒரு திடப் பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும், ஆதலால் பாறையின் விரிசல்கள் மேலும் அதிகரிக்கும். உறைதல் மற்றும் உருகுதல் செயல்முறையானது தொடர்ந்து நடைபெறுவதால் பாறைகள் சிறு பகுதிகளாக உடைக்கப்படுகின்றன. இவ்வகைச் சிதைவு உறைப்பனிச் சிறைவு எனப்படுகிறது. இந்நிகழ்வு காலங்காலமாக சிறுக சிறுக நடைபெற்று வருகிறது. உறைபனிச்சிதைவு உயரமான, குளிர்ந்த, அல்லது துருவ காலநிலைப் பிரதேசங்களில் காணப்படுகிறது.

பனி பிரித்தல்[தொகு]

நீரின் நுண்புழை இயக்கத்தின் காரணமாக நீர் மண்ணுக்குள் நுழைந்து பனி வில்லைகளாக வளர்கின்றன. மண்துகள்கள் இதனால் விரிடைகின்றன.[1] இதே போன்று நீர் துகள்கள் கல்லுக்குள் நுழைந்து பனிப் படிகம் உருவாகிறது. இது அருகிலுள்ள நீர் துகள்களையும் ஈர்க்கிறது. இந்த விரிவாக்கத்தினால் ஏற்படும்  அழுத்தம் பாறைகளை பலவீனப்படுத்தி விரிசலை உண்டாக்குகிறது. இந்த செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது பாறை உடைகிறது.[2]

இதே போன்ற செயல்முறைகளால் பல்வேறு நடைபாதை குழிகள் மற்றும் அரிப்பு ஏற்படுவதை நாம் காணலாம்.[3][4]

கொள்ளளவு விரிவாக்கம்[தொகு]

நீர் உறையும்போது அதன் பருமன்  9 சதவிகிதம்  அதிகமாகும்.[5]-22 °C வெப்பநிலையில் பனிக்கட்டி 207MPa அழுத்தத்தை உருவாக்கும். இது எந்த ஒரு பாறையையும் உடைக்கும் வலிமை கொண்டது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Taber, Stephen (1930). "The mechanics of frost heaving" (PDF). Journal of Geology 38: 303–317. doi:10.1086/623720. Bibcode: 1930JG.....38..303T. http://www.dtic.mil/cgi-bin/GetTRDoc?AD=ADA247424&Location=U2&doc=GetTRDoc.pdf. பார்த்த நாள்: 2017-07-09. 
  2. Goudie, A.S.; Viles H. (2008). "5: Weathering Processes and Forms". In Burt T.P. (ed.). Quaternary and Recent Processes and Forms. Landforms or the Development of Gemorphology. Vol. 4. Geological Society. pp. 129–164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781862392496. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author2= and |last2= specified (help); More than one of |editor= and |editor-last= specified (help)
  3. Eaton, Robert A.; Joubert, Robert H. (December 1989), Wright, Edmund A. (ed.), Pothole Primer: A Public Administrator's Guide to Understanding and Managing the Pothole Problem, Special Report 81-21, U.S. Army Cold Regions Research and Engineering Laboratory
  4. Minnesota's Cold Weather Road Research Facility (2007). "Investigation of Low Temperature Cracking in Asphalt Pavements — Phase II (MnROAD Study)".
  5. T︠S︡ytovich, Nikolaĭ Aleksandrovich (1975). The mechanics of frozen ground. Scripta Book Co. pp. 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-065410-5. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறைபனிச்சிதைவு&oldid=3354678" இலிருந்து மீள்விக்கப்பட்டது