இருத்தலியல் தீவாய்ப்பு
இருத்தலியல் தீவாய்ப்பு என்பது, பூமியில் தோன்றிய அறிவாற்றல் கொண்ட உயிர்கள் முற்றாக அழிந்துவிடக்கூடிய வகையில் அல்லது எதிர்கால வளர்ச்சியைக் கடுமையான முறையில் நிரந்தரமாகக் குறைக்கும் வகையில் ஏற்படக்கூடிய எதிர்கால நிகழ்வை அல்லது நிலைமையைக் குறிக்கும்.[1] இவை உலகப் பேரழிவுத் தீவாய்ப்பின் தீவிரம் கூடிய ஒரு பகுதியாகும்.
இருத்தலியல் பேரழிவுக்கான சாத்தியக்கூறுகள்[தொகு]
இருத்தலியல் நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாட்டு நிகழ்தகவு குறித்துப் பல நிறுவனங்கள் எதிர்வு கூறியுள்ளன. விண்கற்கள் மோதுவதனால் அடுத்த நூற்றாண்டில் மனிதகுலம் அழிந்து விடுவதற்கான நிகழ்தகவு ஒரு மில்லியனில் ஒரு பங்கு மட்டுமே[2] என ஓரளவு துல்லியமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனாலும் சில அறிஞர்கள் இதற்கான வாய்ப்பு முன்னர் கணிக்கப்பட்ட அளவிலும் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் எனக் கூறுகின்றனர்.[3] இதுபோலவே, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய காலநிலை மாற்றம் உண்டாக்குவதற்குப் போதிய அளவிலான எரிமலை வெடிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு 50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை எனக் கணிக்கப்பட்டுள்ளது.[4] 69,000 - 77,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட டோபா எரிமலை வெடிப்பு ஏறத்தாழ மனிதகுலத்தை அழித்துவிடக்கூடிய அளவு தீவிரம் கொண்டதாக இருந்தது.[5] பிறவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களின் வாய்ப்புக்களைக் கணிப்பது மிகவும் கடினம். 2008ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற உலகப் பேரழிவுத் தீவாய்ப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பல்வேறு பேரழிவுத் தீவாய்ப்புக்கள் தொடர்பான வல்லுனர்கள், 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலம் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு 19% எனக் கருத்துக் கூறினர். ஆனாலும், மாநாட்டு அறிக்கை மேற்படி கணிப்புக்கு அடிப்படையான முறைசாரா ஆய்வில் இருந்த சில பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவைக் கவனமாகவே அணுகவேண்டும் எனக் கூறியுள்ளது. பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய அழிவு வாய்ப்புக்களின் சுருக்கம் வருமாறு:
தீவாய்ப்பு 2100க்கு முன் மனிதகுலம்
அழிவதற்கான நிகழ்தகவுமூலக்கூற்று நானோதொழில்நுட்ப ஆயுதங்கள் 5% பேரறிவுத்திறன் AI 5% போர்கள் 4% உருவாக்கப்பட்ட தொற்றுநோய்கள் 2% அணுவாயுதப் போர் 1% நானோதொழில்நுட்ப விபத்து 0.5% இயற்கைத் தொற்றுநோய்கள் 0.05% அணுவாயுதப் பயங்கரவாதம் 0.03%
- அட்டவணை மூலம்: மனிதகுல எதிர்காலம் நிறுவனம், 2008.[6]
குறிப்புகள்[தொகு]
- ↑ Nick Bostrom; Milan M. Cirkovic (29 September 2011). Global Catastrophic Risks. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-960650-4.
- ↑ Matheny, Jason Gaverick (2007). "Reducing the Risk of Human Extinction". Risk Analysis 27 (5).
- ↑ Asher, D.J., Bailey, M.E., Emel’yanenko, V., and Napier, W.M. (2005). Earth in the cosmic shooting gallery. *The Observatory*, 125, 319-322.
- ↑ Rampino, M.R. and Ambrose, S.H. (2002). Super eruptions as a threat to civilizations on Earth-like planets. *Icarus*, 156, 562-569
- ↑ Ambrose 1998; Rampino & Ambrose 2000, pp. 71, 80.
- ↑ உலகப் பேரழிவுத் தீவாய்ப்பு ஆய்வு, தொழில்நுட்ப அறிக்கை, 2008, மனிதகுல எதிர்காலம் நிறுவனம்