ஆக்சுபோர்டு ஆராய்ச்சி கலைக்களஞ்சியம்
ஆக்சுபோர்டு ஆராய்ச்சி கலைக்களஞ்சியம் (Oxford Research Encyclopedias) பல்வேறு பகுதிகளில் உள்ள 25 கலைக்களஞ்சியங்களை உள்ளடக்கியுள்ளது. இது ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் அச்சு மற்றும் நிகழ்நிலையாக வெளியிடப்பட்ட ஒரு கலைக்களஞ்சியத் தொகுப்பாகும். [1] இதன் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் பல வருடங்களாக இதன் இணையதளம் முற்றிலும் இலவசமாக இருந்தது. இப்போது இந்த தளத்தில் கட்டுரைகளை அணுக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் சில பகுதிகளை இலவசமாக அணுக முடியும். [2] ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகம் மற்றும் தேசிய சமூகப் பணியாளர்கள் அச்சகம், அமெரிக்க இயற்பியல் நிறுவனம் மற்றும் பன்னாட்டு ஆய்வுகள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக மூன்று கலைக்களஞ்சியங்கள் கிடைத்தன.. [1]
கலைக்களஞ்சியங்கள்[தொகு]
ஆப்பிரிக்க வரலாறு | பொருளாதாரம் மற்றும் நிதி | இலக்கியம் |
அமெரிக்க வரலாறு | கல்வி | இயற்கை ஆபத்து அறிவியல் |
மானுடவியல் | சமூகப் பணி கலைக்களஞ்சியம் | நரம்பியல் |
ஆசிய வரலாறு | சுற்றுச்சூழல் அறிவியல் | ஆக்சுபோர்டு கிளாசிக்கல் அகராதி |
வணிகம் மற்றும் மேலாண்மை | உலகளாவிய பொது சுகாதாரம் | கிரக அறிவியல் |
காலநிலை அறிவியல் | சர்வதேச கல்வி | அரசியல் |
தொடர்பு | இலத்தீன் அமெரிக்க வரலாறு | உளவியல் |
குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி | மொழியியல் | மதம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Disciplines". Oxford Research Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
- ↑ "About". Oxford Research Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.