அலெக்சாண்டர் பாபு
அலெக்சாண்டர் பாபு | |
---|---|
பிறப்பு | அலெக்சாண்டர் பாபு அருலந்து 18 திசம்பர் 1975 அந்தவூரணி, இராமநாதபுரம், தமிழ் நாடு |
தேசியம் | இந்தியன் |
பணி | நகைச்சுவை நடிகன், இசையமைப்பாளர், இயக்குனர், வலையொளியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2014 - தற்போது வரை |
அறியப்படுவது | இந்திய மேடைச் சிரிப்புரை நகைச்சுவை கலைஞர், வலையொளியாளர் |
வாழ்க்கைத் துணை | சுமிதா |
வலைத்தளம் | |
http://alexanderbabu.com/ |
அலெக்சாண்டர் பாபு அருலந்து ஓர் இந்திய மேடைச் சிரிப்புரை நகைச்சுவை கலைஞர். மேலும் இவர் ஓர் பாடகர், யோகா ஆசிரியர் மற்றும் நடிகர். இவரின் மேடை பெயரான அலெக்சாண்டர் பாபு அல்லது அலெக்ஸ் பாபு என்று அழைக்கப்படுகிறார். [1] [2]
2014 ஆம் ஆண்டில், அலெக்ஸாண்டர் பாபு தனது கார்ப்பரேட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, நகைச்சுவை மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். [3] இவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய இராச்சியம், குவைத் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். [4] [5] 2019 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமிற்காக தனது 120 நிமிட ஆங்கில-தமிழ் ஸ்டாண்ட்-அப்-மியூசிக் ஸ்பெஷலான அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டை தயாரித்தார் .
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
அலெக்சாண்டர் பாபு ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் அந்தவூரணி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். [6] [7] இவர் சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றார். அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் அங்கேயே மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். [8] இவர் அமெரிக்காவில் இருந்தபோது கர்நாடக பாடகராக தன்னை நிலைநிறுத்திட பயிற்சி பெற்றார்.
தொழில்[தொகு]
அலெக்சாண்டர் பாபு தனது கார்ப்பரேட் வேலையை ஒரு மென்பொருள் பொறியாளராக விட்டுவிட்டு தனது ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைத் தொழிலைத் தொடங்கினார். [3] [9] ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக்கான தனது ஆரம்ப வாழ்க்கையின் போது, இவர் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட நகைச்சுவை இயக்கமான எவம் ஸ்டாண்ட்-அப் தமாஷாவில் பணியாற்றினார். ஜூலை 2017 இல், இசை, கதைசொல்லல் மற்றும் நகைசுவை நிகழ்ச்சியான அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடங்கினார். இந்த நிகாழ்ச்சியால் இவருக்கு ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றது. [10] இவர் அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டின் 115 நிகழ்ச்சிகளை 2019 ஆம் ஆண்டில் முடித்த பின்னர் அதை இப்போது ஒரு அமேசான் பிரைம் ஸ்பெஷலாக உள்ளது [11] இவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவரது வீடியோக்கள் இவருக்கு மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. மற்றும் ஏப்ரல் 2020 நிலவரப்படி 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் இவரது சேனல் கொண்டுள்ளது.
ஆண்டு | படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2019 | அடாடே | ||
அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் | அவரே | தொலைக்காட்சி படம் | |
2020 | மாரா | திருடன் |
வலைத் தொடர்[தொகு]
ஆண்டு | நிரல் பெயர் | பங்கு | வலைப்பின்னல் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2020 | நேரம் என்னா பாஸ் | சந்தோசம் | அமேசான் பிரைம் | [12] |
பாடகர்[தொகு]
ஆண்டு | படம் | பாடல் | குறிப்புகள் |
---|---|---|---|
2020 | தாராள பிரபு | "ராசா மாவன்" |
குறிப்புகள்[தொகு]
- ↑ "BBC Asian Network - Ashanti Omkar, Alexander Babu Arulanthu". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "The yogi act". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ 3.0 3.1 "Stand-up comedian Alexander Babu talks about using music as a tool of storytelling in his show, Alex in Wonderland". www.indulgexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "Alex in Wonderland". www.ticketmagic.me. Archived from the original on 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "Alexander Babu's Special 'Alex in Wonderland' Hits Amazon Prime Video on 23 August". Dead Ant (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ Suhasini, Lalitha. "Light music". Pune Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-08. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
- ↑ "Alexander the Comic bring his first solo show to Coimbatore today!". www.indulgexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ Alexander Babu (2019-06-14). "Alex in Crazy Land: Tribute to a comic genius". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "Meet stand-up comedian Alexander Babu for an hour over Tamil films and music". mid-day (in ஆங்கிலம்). 2017-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "Watch: Comedian Alexander Babu sings 'Mouna Raagam' classic in English". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Light music". Pune Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 2020-10-16. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Time Enna Boss trailer: A fun Tamil series about time travel". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.