அரிஸ்டோலோக்கிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிஸ்டோலோக்கிக் அமிலம் (Aristolochic acid) மரபணு திடீர் மாற்றத்தைத் தூண்டி புற்று நோயை உண்டாக்கக் கூடியதும் சிறுநீரக நச்சுப் பொருளுமான ஒரு வேதிப்பொருள் ஆகும். இது சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அரிஸ்டோலேசியே[1] வகை மூலிகைத் தாவரங்களில் காணப்படுகிறது.[2]

பால்கன் சிறுநீரகநோய்க்கும் இந்த அமிலமே காரணம் என்று கருதப்படுகிறது..[3][4]

அரிஸ்டோலோக்கிக் அமிலம் நீரில் ஓரளவு கரையக் கூடியது; கசப்புச் சுவையுடையது;[5] அதிக உருகுநிலை (281 முதல் 286 டிகரி செல்சியசு) உடையது.[6]

சிறிதளவு அரிஸ்டோலோக்கிக் அமிலம் கூட நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டக் கூடியது. மற்ற பாக்டீரியக் கொல்லி மருந்துகளைப் போலன்றி இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாய் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wu, Tian-Shung et al. (2005). "Chemical constituents and pharmacology of Aristolochia species". In Rahman, Atta-ur (ed.). Studies in Natural Products Chemistry: Bioactive Natural Products (Part L). Gulf Professional Publishing. p. 863. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444521712. {{cite book}}: Explicit use of et al. in: |authors= (help)
  2. Nolin, Thomas D. & Himmelfarb, Jonathan (2010). "Mechanisms of drug-induced nephrotoxicity". In Uetrecht, Jack (ed.). Adverse Drug Reactions. Springer. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642006623.
  3. "Introduction and perspectives on the Chemistry and Biology of DNA Damage". The Chemical Biology of DNA Damage. Wiley-VCH. 2010. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527322954. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  4. Molecular epidemiology of chronic diseases. John Wiley & Sons. 2008. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470027431. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  5. Reviews of physiology, biochemistry and pharmacology, Volume 154. Birkhäuser. 2006. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540303848. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  6. Barceloux, Donald G. (2008). "Aristolochic acid and Chinese Herb nephropathy". Medical toxicology of natural substances: foods, fungi, medicinal herbs, plants, and venomous animals. John Wiley & Sons. p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471727613.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஸ்டோலோக்கிக்_அமிலம்&oldid=3775787" இலிருந்து மீள்விக்கப்பட்டது