அயோடின் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடின் நைட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடோ நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
14696-81-2 Y
ChemSpider 67165553
InChI
  • InChI=1S/INO3/c1-5-2(3)4
    Key: CCJHDZZUWZIVJF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13406959
  • [N+](=O)([O-])OI
பண்புகள்
INO3
வாய்ப்பாட்டு எடை 188.91 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அயோடின் நைட்ரேட்டு (Iodine nitrate) என்பது INO3. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் I–O–NO2 என்ற மூலக்கூற்று கட்டமைப்பில் உள்ள ஒரு சகப் பிணைப்புச் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

பாதரசம்(II) நைட்ரேட்டுடன் ஈதரிலுள்ள அயோடின் வினைபுரிவதால் அயோடின் நைட்ரேட்டு உருவாகிறது..[1]

மற்ற நைட்ரேட்டு உப்புகளையும் இவ்வினைக்காகப் பயன்படுத்தலாம்.[1]

பண்புகள்[தொகு]

ஒரு வாயுவாக இது சற்று நிலையற்றது. −3.2×10−2 s−1 என்ற விகித மாறிலியுடன் அயோடின் நைட்ரேட்டு சிதைகிறது.[2] வளிமண்டலத்தில் இந்த இரசாயனத்தின் உருவாக்கமும் ஓசோனை அழிக்கும் திறனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் சாத்தியமான சில வேதி வினைகள்[3]:

IONO2 → IO + NO2
IONO2 → I + NO3
I + O3 → IO + O2

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hassner, Alfred (15 April 2001). "Iodine Nitrate". Encyclopedia of Reagents for Organic Synthesis: ri016. doi:10.1002/047084289X.ri016. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470842898. 
  2. Barnes, Ian; Becker, Karl H.; Starcke, Juergen (November 1991). "Fourier-transform IR spectroscopic observation of gaseous nitrosyl iodine, nitryl iodine, and iodine nitrate". The Journal of Physical Chemistry 95 (24): 9736–9740. doi:10.1021/j100177a026. 
  3. Allan, B. J.; John Plane (September 2002). "A Study of the Recombination of IO with NO2 and the Stability of INO3: Implications for the Atmospheric Chemistry of Iodine". The Journal of Physical Chemistry A 106 (37): 8634–8641. doi:10.1021/jp020089q. Bibcode: 2002JPCA..106.8634A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_நைட்ரேட்டு&oldid=3867619" இலிருந்து மீள்விக்கப்பட்டது