அமிர்தசரசு பாரம்பரிய தெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தசரசு பாரம்பரிய தெரு
Heritage Street Amritsar
பாரம்பரிய நடை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய பஞ்சாப் அரசு
நீளம்:1.1 km (0.68 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
26 அக்டோபர் 2016 – present
முக்கிய சந்திப்புகள்
Tourist loop around அமிருதசரசு
தொடக்கம்:ந்கர அரங்கம்
To:பொற்கோயில்
நெடுஞ்சாலை அமைப்பு

அமிர்தசரசு பாரம்பரிய தெரு (Heritage Street Amritsar) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரசு நகரத்தில் காணப்படும் பழமையான தெருக்களில் ஒன்றாகும். பொற்கோயிலுக்கும் நகர அரங்கத்திற்கும் இடையில் இத்தெரு அமைந்துள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பிரகாசு சிங் பாதல் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 அன்று புனரமைத்து மீண்டும் திறந்தார். இத்தாலியின் புளோரன்சு, வெனிசு, ரோம் போன்ற ஐரோப்பிய நகரங்களைப் போல அமிர்தசரசு நகரத்தையும் ஒரு சுற்றுலா ஈர்ப்புடன் திறந்த நடைபாதையுள்ள தெருவாகவும் மூடப்படாத நினைவுச்சின்னங்களின் வரிசை அமையுமாறும் இத்தெரு அமைந்திருக்கிறது.[1]

வரலாறும் பின்னணியும்[தொகு]

இந்தியாவின் பஞ்சாபில் பொற்கோயிலை பார்வையிட தினமும் 100,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். பொற்கோயில் முதல் நகர அரங்கம் வரை நீட்டிக்கப்பட்ட பாதையில் வாகனங்கள், மேல்நிலை கம்பி வடங்கள், சாலை அத்துமீறல்கள் மற்றும் கூவி விற்கும் தெரு வியாபாரிகள் என சாலை முழுக்க மக்கள் கூட்டம் குவிகிறது. தெருவிலுள்ள 170 கடைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு புதிய 'பாரம்பரிய முகப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் ஏதுவும் புகாத மண்டலமாக உருவாக்க நினைத்தே பாரம்பரிய தெரு உருவாக்கப்பட்டது. 1200 பேர் இக்கட்டுமான பணியில் ஈடுபட்டு 330 நாட்களில் பணிகளை முடித்தனர்.[2]

கட்டுமானம்[தொகு]

நேர்மையான கட்டிடக் கலைஞர்கள்[3] என்று அழைக்கப்பட்ட செய்ப்பூரைச் சேர்ந்த அனுப் பர்தாரியாவும் அவரது நிறுவனமும் இக்கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். புனித பொற்கோயிலுக்குச் செல்லும் தெருவும் அங்குள்ள முகப்புகளும் ஐரோப்பிய நகரங்களைப் போல வரிசையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டன. 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அமிர்தசரசை நினைவூட்டும் வகையில் ஒரு பாரம்பரிய தோற்றத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணம் புதுப்பித்தலுக்கான பின்னணியில் இருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் முகப்புகளும் இத்திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு முகப்பின் கட்டுமானத்திலும் அதன் aத்தியாவசியத் தேவையும் தனித்துவமும் நிறைந்திருந்தன. பொது இடங்களில் கட்டுமான பொருத்துதல்களை ஏற்றுவதே மிகப்பெரிய தடையாக இருந்தது. கட்டடக் கலைஞர்கள் பொருள்களைப் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நகர அரங்கத்தில் ஏற்கனவே முகப்பு கட்டப்பட்டிருந்தது. பாரம்பரிய தெருவின் ஒரு பகுதியாக இருந்தாலும் அரங்கின் முகப்பில் தோண்டுதல், வெளிப்புற ஏற்றம் போன்ற கூடுதல் செப்பனிடும் பணிகள் இங்கு அனுமதிக்கப்படவில்லை.[4]

முக்கிய இடங்கள்[தொகு]

அமிர்தசரசில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய தெரு இந்தியாவில் அமைக்கப்பட்ட முதலாவது தெருவாகும் இதன் வெற்றிக்குப் பின்னர் அமிர்தசரசு பாரம்பரியத் தெரு வரிசையில் மேலும் பல தெருக்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. தில்லியிலுள்ள சாந்தினி சவுக்கும்[5] பட்டியாலாவிலுள்ள பாரம்பரியத் தெருவும்[6] இதற்கு எடுத்துகாட்டுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Golden Temple heritage street: Revamp heralds Amritsar's makeover". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  2. "Amritsar: Parkash Singh Badal to inaugurate 'Heritage Street' today". The Indian Express (in ஆங்கிலம்). 25 October 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  3. "HT Special | Amritsar's makeover: Golden grandeur with a heritage tinge". Hindustan Times (in ஆங்கிலம்). 24 October 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  4. "Heritage Street Golden Temple, Amritsar" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  5. "Explained: What will the new Chandni Chowk look like?". The Indian Express (in ஆங்கிலம்). 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  6. "After Amritsar, Patiala to get heritage street". Hindustan Times (in ஆங்கிலம்). 30 June 2018. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.