உள்ளடக்கத்துக்குச் செல்

குறுக்கீட்டுமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குறுக்கீட்டுமானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மைக்கல்சன் குறுக்கீட்டுமானி மூலமாக ஒளியின் பாதை

குறுக்கீட்டுமானம் (Interferometry) என்பது அலைகளை, வழமையாக மின்காந்த அலைகளை, ஒன்றின்மீது ஒன்று பொருத்தி அந்த அலைகளைப் பற்றி தகவல்களைப் பெறும் தொழில்நுட்ப தொகுப்பாகும்.[1] குறுக்கீட்டுமானம் வானியல், ஒளியிழை, பொறியியல் அளவையியல், ஒளிமை அளவியல், கடற்பரப்பியல், நிலவதிர்ச்சியியல், நிறமாலையியல் (மற்றும் வேதியியலில் இதன் பயன்பாடுகள்), குவாண்டம் விசையியல், அணுக்கருவியல் மற்றும் துகள் இயற்பியல், பிளாசுமா (இயற்பியல்), தொலையுணர்தல், உயிரிமூலக்கூற்றியல் இடைவினைகள், மேற்பரப்பு தரவுதிரட்டல், நுண்பாய்மங்கள், இயக்கவியல் தகைவு/திரிபு அளவியல், மற்றும் வேக அளவியல் போன்ற துறைகளில் முக்கிய புலனாய்வு தொழில் நுட்பமாக விளங்குகிறது.[2]:1–2

குறுக்கீட்டுமானிகள் அறிவியலிலும் தொழிற்துறையிலும் சிறு நகர்வுகளையும் ஒளிவிலகல் குறிப்பெண் மாற்றங்களையும் மேற்பரப்பு முறைகேடுகளையும் அளவிட முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Bunch, Bryan H; Hellemans, Alexander (April 2004). The History of Science and Technology. Houghton Mifflin Harcourt. p. 695. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-22123-3.
  2. Hariharan, P. (2007). Basics of Interferometry. Elsevier Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-373589-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்கீட்டுமானம்&oldid=2745935" இலிருந்து மீள்விக்கப்பட்டது