அ. கி. இராமானுசன்
ஏ. கே. இராமானுஜன் A. K. Ramanujan | |
---|---|
பிறப்பு | மைசூர், இந்தியா | மார்ச்சு 16, 1929
இறப்பு | சூலை 13, 1993 சிகாகோ, அமெரிக்கா | (அகவை 64)
மொழி | ஆங்கிலம், கன்னடம், தமிழ் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர், ஆங்கில இலக்கியம் |
கல்வி நிலையம் | மைசூர் பல்கலைக்கழகம், தெக்கான் கல்லூரி, இந்தியானா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | மெக்கார்தர் ஆய்வுப்பணி, சாகித்திய அகாதமி விருது, பத்மசிறீ |
அத்திப்பட்டி கிருட்டிணசுவாமி இராமானுசன் (Attipate Krishnaswami Ramanujan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞரும் மொழியியல் வல்லுநரும் ஆவார்.[1] 1929 ஆம் ஆன்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2][3] எழுத்தாளர், ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் இவர் மொழியியல் பேராசிரியராக இருந்தார்.
தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர்.
1993 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று இவர் காலமானார்.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ramanujan, Attipat Krishnaswami". scholarblogs.emory.edu. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018.
- ↑ "Guide to the A.K. Ramanujan Papers 1944-1995". lib.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018.
- ↑ "A.K. Ramanujan: a lonely hero". livemint.com. 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
வெளி இணைப்புகள்[தொகு]
- Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation Chapter 2 of may Ramayanas; website with he comple book
- Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation pdf